Other News

தப்பிக்குமா தமிழகம்?

கன்னியாகுமரி கடற்பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயலைத் தொடர்ந்து, அடுத்து ஒரு புயலை தமிழகம் சந்திக்கவுள்ளது. குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 01.12.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது […]

ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்! – மக்ரோன் தெரிவிப்பு!

ஆப்பிரிக்காவில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலிட இருப்பதாக இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Burkina Faso நாட்டில் வைத்து இதனை அறிவித்துள்ளார். ஒரு பில்லியன் யூரோக்கள் வரை சிறிய மற்றும் நடுத்தர அளவுகளிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் முதலீடு செய்ய உள்ளது எனவும், மிக குறிப்பாக விவசாயத்துக்காக இந்த முதலீடு இருக்கும் […]

தாயகத்தை கண்முன்னே நிறுத்திய‌ சார்சல் மாவீரர் நாள்

போராளிகள் இணைந்து தமிழீழ விடுதலைப்போரின் முதல் மாவீரர் லெப்.சங்கர் அண்ணாவின் நினைவுத்தூபி அமைந்துள்ள சதுக்கத்தில் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு அமைதியாக தாயகத்தை கண்முன்னே நிறுத்தி நின்றது. மேலும் சிறப்பாக எமது 1066 மாவீரர்களது திருவுருவப்படங்களையும் தரிசிக்க பிரஞ்சுநாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் , சார்சல் மாநாகர முதல்வரும், வல்துவாஸ் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியும் , சார்சல் மாநகரசபை பிரமுகர்களும் வந்திருந்தார்கள். முக்கியமாக பிரான்சு நாட்டின் […]

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் களத்தில் குதிப்பு!

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்றது. மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். “வன்முறைகளற்ற வீடு, சமூகம், நாடு எமக்கு வேண்டும்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும்”, “இனங்கள் இணைந்து […]

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளது

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாகப் புதிய யாப்பில் உறுதிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட 21 ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் மன்னார் நகர […]

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்!

மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் […]

உருவாகிறதா சூறாவளி? எதிர்வுகூறும் வானிலை அவதான நிலையம்

இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் ஊடாகக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் அனேக பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை […]

மைத்திரிபால சிறிசேன

முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை […]