ஆப்பிரிக்காவில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலிட இருப்பதாக இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
தனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், Burkina Faso நாட்டில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் யூரோக்கள் வரை சிறிய மற்றும் நடுத்தர அளவுகளிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் முதலீடு செய்ய உள்ளது எனவும், மிக குறிப்பாக விவசாயத்துக்காக இந்த முதலீடு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிதியினை பிரான்சின் பொது முதலீட்டு வங்கி வழங்க உள்ளது.
ஆப்பிரிக்காவில் சனத்தொகை அதிகரிப்பு பெரும் சவாலாக உள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் 450 மில்லியன் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவேண்டும். இதற்கான சிறு முதலீடாக இது இருக்கும் எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
தனது ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





