கடும் மழையின் எதிரொலியாக ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று […]
Other News
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்குழு இலங்கை வருகிறது.!
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடும் நோக்கிலேயே இந்த செயற்குழுவின் விஜயம் அமையவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐககிய நாடுகளின் இந்த […]
போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்
உலக நாடுகளின் எதிர்ப்பு, தொடர் பொருளாதார தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. அந்த நாடு அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகிற வடகொரியாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு […]
போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை
கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போரின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது. இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக […]
மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !
மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. […]
மீட்புப் பணிகளுக்கு பொலிஸார் தயார் நிலையில்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்ந்து நீடித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களை அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், அங்கு உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு […]
தாழமுக்கம் சூறாவளியாக உருவாகும் சாத்தியம்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த தாழமுக்கமானது அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தற்போது காலியிலிருந்து வடமேற்காக 185 கிலோமீற்றர் தூரத்திலும் கொழும்பிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்திலும் சூறாவளி நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு,சப்ரகமுவ, மத்திய,மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 100 தொடக்கம் […]
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களே அவதானம் !
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள்மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடும் காற்றினால் நாட்டின் பல பகுதிகளிலும் சேதம்
நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதன் எதிரொலியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக் கூரைகளும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை ஆகிய தென் மாகாணப் பகுதிகளிலும் பதுளையிலும் சற்று முன் வீச ஆரம்பித்திருக்கும் கடும் காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை அருகே மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் […]
விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருத […]





