தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் – இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இது எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வங்காள விரிகுடா வழியாக இந்தியாவின் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடல் பகுதியில் […]
Other News
வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று
வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிட்டப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் விதானகமகே நந்தராஜா மனுவைத் தாக்கல் […]
மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!
மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியும், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியும் இன்னுமொரு தடவை பேச்சு நடத்தவுள்ளன என்று அறிய முடிகின்றது. இரு அணிகளும் முன்னர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. சில பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இரு அணிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்று கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
பிறருக்கு உதவ வேண்டுமென்று நினைப்பவர்களிடம் வசதி இல்லை
‘‘உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடம் வசதி இருப்பதில்லை. வசதி இருப்பவர்கள் உதவி செய்வதில்லை. இவ்வாறான சமூகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.’’ இவ்வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு தின நிகழ்வு யாழ்ப்பாண நகர விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண […]
இரண்டு எம்பிக்கள் தகுதிநீக்கம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய […]
யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். […]
இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு.!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் […]
”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”
சீரற்ற காலநிலை காரணமாக இவ் வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை யில் எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது என பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரிவித்துள்ளார். க.பொ.த.சாதாரண தர பரீட் சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றிற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் […]
ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். […]





