சின்னதாக ஏதாவது பிரச்சனை நடந்தாலே அதை அரசியல்வாதிகள் பெரிதாக்கி குளிர் காய்வார்கள். தற்போது வைரமுத்து மற்றும் சங்கராச்சாரியர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சும்மா இருப்பார்களா? திடீரென தமிழ்ப்பற்று பொங்கி எழுந்து வீராவேசமாக அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி தற்போது படம் இல்லாமல் சும்மா இருக்கும் திரையுலகினர்களும் தங்களுடைய தமிழ்ப்பாசத்தை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் இம்யம் பாரதிராஜா காஞ்சி விஜயேந்திரர் குறித்த சர்ச்சைக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
Other News
இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இந்தோனேஷிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பின் போது, இந்தோனேஷியா இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவுகள் […]
2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.!
எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள 2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் […]
அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!
நான் ஆட்சியில் இருக்கும் போது பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். […]
விஜயேந்திரர் விவகாரத்தில் வைரமுத்து கருத்து இது தான்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்து சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்துவிட்டு தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திரர் செய்தது தமிழுக்கும், […]
பெண்களை சீண்டுபவர்கள் கையே வெட்டவேண்டும் – அனுஷ்கா !
அனுஷ்கா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பாகமதி. இப்படம் ஒரு ஹார்ரோர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.
லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல்
லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கார் மூலம் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அங்குள்ள பெங்காஸி என்ற நகரம் அருகே உள்ள மசூதி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தில் வைத்து வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அடுத்தடுத்த இந்த […]
கதிகலங்க வைத்த நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் தான் நடிக்கும் படங்களை சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது, அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அன்று முதல் இன்று வரை அப்படியே இருப்பவர். தற்போது தெலுங்கு படமொன்றில் நடிகைகள் ஏற்க தவிர்க்கும் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா […]
இன்றைய ராசிபலன் 24.01.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்: திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். […]
அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாகில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த […]





