பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம் ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரேரணையில் 4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
Other News
கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்
ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் […]
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம்
தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான […]
மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகல தரப்புக்களுடனும் இணைந்து வினைத்திறனாக பணியாற்றத் தயார் – இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் பூகோள காலாந்தர மீளாய்வு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டுக்காக இலங்கை உறுதியான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார். உள்நாட்டு – வெளிநாட்டு ரீதியில் மனித உரிமைகளை மேம்படுத்தும் போதுஇ ஐக்கிய நாடுகள் சபைஇ முறையான நடவடிக்கைகள் என்பனவற்றுடன் தனி அரசுகளுடனும் வினைத்திறனான முறையில் பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. கடந்த […]
நாட்டின் பொருளாதாரம் தெளிவான வளர்ச்சியில் : மத்திய வங்கியின் ஆளுநர்
நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் தெளிவான வளர்ச்சியை எட்டியுள்ளது – இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். கொழும்ரில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ~~நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை […]
பிரதமருக்கு எதிரான தீர்மானம் : சு.கவில் பொதுவான இணக்கப்பாடு இல்லை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புpரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று அல்லது நாளை பொது […]
இன்றைய ராசிபலன் 21.03.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். […]
மறைந்த கணவரை காண தஞ்சை வந்தடைந்தார் சசிகலா..
மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா சிறையிலிருந்து புறப்பட்டு தற்போது தஞ்சைக்கு வந்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, மதியம் சிறையில் இருந்து […]
முறுக்கு மீசை கெட்டப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் தேவர் மகன் பட பாணியில் முறுக்கு மீசை கெட்டப்புடன் வளம் வந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து பிஸியாகச் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது. அதற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்- 2 படத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில், கமல் தற்போது முறுக்கு மீசை கெட்டப்புக்கு மாறியுள்ளார். இதனால் அவர் […]
ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றிய தமிழ் மக்கள் : கருணாகரம்
தமிழ் பேசும் மக்கள் தனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என ஜனாதிபதி கூறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திக்கு அப்பால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக இன்றுவரையில் போராடிக்கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு தமிழர்களின் ஒருமித்த […]





