சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் […]
உலக செய்திகள்
ஜப்பான்: அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதியதில் மாயமான கடற்படை வீரர்கள் உயிரிழப்பு
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதிய விபத்தில் மாயமான கடற்படை வீரர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 […]
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் ஆட்சியை பிடித்தார். அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி […]
சீனாவில் மழலையர் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு
சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் பிரபலமான நர்சரி பள்ளியில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது பள்ளியின் பிரதான வாயில் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால், குழந்தைகளும் பெற்றோரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். பலரது உடல் உறுப்புகள் […]
கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்: டிரம்ப் இன்று அறிவிக்கிறார்
கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் […]
செர்பியாவில் ஓரினச் சேர்க்கை பெண் பிரதமர்: அதிபர் நியமனம் செய்தார்
செர்பியாவில் புதிய பிரதமராக ஓரினச் சேர்க்கையாளர் அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்தார். செர்பியா நாட்டின் புதிய அதிபராக அலெக்சாண்டர் வுசிக் சமீபத்தில் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு நடைபெற்றது. அதில் பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் புதிய பிரதமராக அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் […]
அயர்லாந்தின் இளம் பிரதமராக இந்திய வம்சாவளி மருத்துவர் தேர்வு
அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி பதவி விலகியதை அடுத்து ஆளும் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் பிரதமராகும் வாய்ப்பினை வரத்கர் பெற்றார். 38 வயதாகும் […]
ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை: 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் தொடர்ந்து கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளும், ஈராக் ராணுவத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான தியாலா, வட மத்தி மாகாணமான சலாகுதீன் ஆகியவற்றின் எல்லையில் உள்ள மெட்டிபிஜா பகுதியில் பதுங்கி இருந்த […]
பனாமா லீக்ஸ் விவகாரம்: புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஆஜரானார் நவாஸ் ஷெரீப்
பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கோர்ட் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. பனாமா கேட்’ என […]
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல் சுற்று முடிவில் தெரியவந்துள்ளது. பிரான்சில் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச்சே(குடியரசை நோக்கி நகர்வு) என்ற கட்சியின் தலைவரான மேக்ரான் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் 577 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் சுற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 49 […]





