செர்பியாவில் ஓரினச் சேர்க்கை பெண் பிரதமர்: அதிபர் நியமனம் செய்தார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

செர்பியாவில் புதிய பிரதமராக ஓரினச் சேர்க்கையாளர் அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்தார்.

செர்பியா நாட்டின் புதிய அதிபராக அலெக்சாண்டர் வுசிக் சமீபத்தில் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு நடைபெற்றது.

அதில் பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் புதிய பிரதமராக அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்தார்.

பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள அனா பிரபிக் ஒரு ஓரின சேர்க்கையாளர் ஆவார். செர்பியா பழமைவாதிகள் நிறைந்த நாடு. அங்கு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

கூட்டணி கட்சியின் ஒருங்கிணைந்த செர்பியா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செர்பியாவில் பிரதமர் நியமனத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் இதில் சிக்கல் எழ வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஐரோப்பியாவில் அயர்லாந்தின் லியோ வராத்கர், லூசம் பெர்க்சின் சேவியர் பெட்டல் ஆகியோர் ஓரின சேர்க்கை பிரதமராக உள்ளனர். அந்த வரிசையில் தற்போது அனா பிரபிக்கும் இணைந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *