உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி குவைத்தில் இருந்து 15 ஈரான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். குவைத்தில் 2015-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடத்தவும், உளவு வேலை பார்க்க இவர்களுக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து குவைத்தில் இருந்து […]
உலக செய்திகள்
நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்த ராணி எலிசபெத்
நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் பராமரித்து வருகிறார். இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார். இந்த […]
பின்லேடனை துப்பாக்கியால் 3 முறை சுட்டு கொன்றேன்: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்
அல்கொய்தா தலைவர் பின்லேடனை 3 முறை சுட்டு கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. […]
கத்தாருக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்திய அரபு நாடுகள்
கத்தாருக்கு விதித்த 13 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை கைவிட்டதாக சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான கத்தாருக்கும் அதையொட்டியுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட், பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கத்தார் நாடு ஈரான் மற்றும் துருக்கிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எனவே கத்தாரை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு பல்வேறு […]
ஜி20 மாநாட்டில் டிரம்ப்-புடின் இடையே ரகசிய சந்திப்பு?
ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதல் முறையாக […]
ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறியதால் திருமண பதிவை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியரில் கணவன் பெண்ணாக மாறியதையடுத்து அவர்களின் திருமணத்தை செல்லாது என அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அவர் பிறப்பு உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் பெண்ணாக மாறினார். இருந்தும் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்தனர். இந்த நிலையில் […]
கட்சி உறுப்பினர்கள் மத நம்பிக்கையை கைவிட வேண்டும்-சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவு
சீனாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை மத நம்பிக்கையை கைவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சனிக்கிழமை குயுஷி பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அக்கட்சியின் விதிமுறைகளை பற்றி கூறப்பட்டிருந்தது. இது குறித்து அக்கட்சியின் உறுப்பினர் வாங் சுயான் கூறுகையில், கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நலனிற்காக தங்கள் மத […]
ஜெருசலேம்: துப்பாக்கிச் சூடு நடந்த பழைமையான மசூதி மீண்டும் திறப்பு – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன. இதேபோல், இஸ்ரேல் நாட்டு […]
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பில் பெண் சுட்டுக்கொலை
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ்- ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]
ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளனர். எல்லை தாண்டி வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று விடுகின்றனர். எனவே, ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் […]





