உலக செய்திகள்

பெண்களுக்கு 50 வயதுக்கு பிறகு ‘செக்ஸ்’ அவசியம்: ஐரோப்பிய கோர்ட்டு கருத்து

பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை என்றும் 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் (72). 1995-ம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்பு உறுப்பில் ஆபரேசன் நடந்தது. அப்போது நடந்த தவறான ஆபரேசனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து […]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு: டிரம்ப் மருமகனிடம் எம்.பி.க்கள் விசாரணை

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி […]

சிரியா போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது வீண்வேலை – டிரம்ப் பாய்ச்சல்

சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக இயங்கி வரும் போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது ஆபத்தான வீண்வேலை என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, சிரியா நாட்டின் தெற்கு பகுதியில் போர் பதற்றத்தை தணிப்பதற்கு செய்ய வேண்டிய சமாதான முயற்சிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை […]

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டார். இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட […]

ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்த பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதச் செய்தான் இந்த திடீர் தாக்குதலில் சம்பவ […]

மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது. ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி […]

நேரடி பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு […]

ஜெருசலேமில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நாளை கூடுகிறது

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த டிசம்பர் மாதம் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் […]

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் – தபால் ஓட்டு முறைக்கு மந்திரி

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் ஓட்டு முறையை நடத்தலாம் என ஆஸ்திரேலியா நாட்டின் மூத்த மந்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு மந்திரிகளில் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு […]

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் சவூதி அரேபியா

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலைமையிலான கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக […]