ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறியதால் திருமண பதிவை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியரில் கணவன் பெண்ணாக மாறியதையடுத்து அவர்களின் திருமணத்தை செல்லாது என அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனவே அவர் பிறப்பு உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டார்.

அதை தொடர்ந்து அவர் பெண்ணாக மாறினார். இருந்தும் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார்கள். அதற்கான ஆவணத்தில் அவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதை குறிப்பிட்டார்.

அதன் பின்னரே அது வெளியில் தெரிந்து சர்ச்சையானது. அதை தொடர்ந்து அந்த தம்பதியின் திருமண பதிவை சிங்கப்பூர் அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் ஓரின சேர்க்கை தம்பதியின் திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை. எனவே ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் கணவன், மனைவி ஆக வாழ முடியாது என பிரதமர் லீ சியன் லாங் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *