தமிழ்நாடு செய்திகள்

எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்…

சென்னை: எம்பிக்கான பென்ஷன் தொகை இனி தனக்கு வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநிலங்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமத்துவமக்கள் கட்சித் தலைவரான சரத்குமார் 2002ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்ஜிய சபா உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் 2006ஆம் ஆண்டு கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து முன்னாள் எம்பிக்கான ஓய்வூதியம் சரத்குமாருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான […]

வீறுகொண்டு எழுந்த விஜயகாந்த்.. காரைக்குடியில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு

சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம் தேதி காரைக்குடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 […]

நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால்… மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்

திண்டுக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே […]

போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

புதிய கட்சி துவங்குவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக உலகநாயகன் கமல் ஹாசன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஆங்கில இதழுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து அளித்துள்ள பேட்டியில், எனக்கும் அரசியல் சிந்தனை உள்ளது எனது சிந்தனையுடன் எந்த அரசியல் கட்சியும் ஒத்து போகவில்லை. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எனக்கு இல்லை. அரசியலில் புதிய […]

செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!

திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் என்ற 15வயது சிறுவனும், மாஜித் முகமது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]

ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

மதுரை: அதிமுக அரசை ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தினகரன் இன்று இரவு அளித்த பரபரப்பு பேட்டியின் விவரம்: துரோகம், சுயநலம் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது அம்மாவின் ஆட்சியல்ல, எடப்பாடி பழனிச்சாமியின் துரோக ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சியை மாற்றவும் நாங்கள் தயாராகிவிட்டோம். தர்ம யுத்தம் […]

ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

நடிகர் கமலஹாசனை (ஆடம்பர முட்டாள்) என பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: (ஆடம்பர முட்டாள்) கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி – விஜயகாந்த் பேச்சு

மதுரை : ”தமிழகத்தில் மக்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது,” என மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியினர் திருமணவிழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:ஜெ., இறப்பிற்கு பின், தர்மத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பதவிக்காக முதல்வர் பழனிசாமி பின்னால் சென்றுவிட்டார். அவரது கொள்கை எங்கே போயிற்று. ஏழைகளுக்கு உதவாத ஆட்சி நடக்கிறது. வெற்றி பெற்று மக்களை வஞ்சிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் […]

என்னை தடுக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எச்.ராஜாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள எச்.ராஜா, செப்., 16 ல் நடக்கும் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். சாரணர் – சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது […]

நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி பேசிவரும் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றி பேசினார். “இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதில் ஏன் நீட் பற்றி பேசவேண்டும். எப்போதும் பொழுதுபோக்கிகொண்டிருக்க முடியாது. நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். இது என் கருத்து, விமர்சனங்களை வரவேற்கிறேன். கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில […]