தமிழ்நாடு செய்திகள்

ஆடம்பர முட்டாள் கமல் : சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

நடிகர் கமலஹாசனை (ஆடம்பர முட்டாள்) என பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: (ஆடம்பர முட்டாள்) கமலஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக எனக்கு தெரியவந்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக டுவிட்டரில் கமல், அரசியல் விவகாரங்களை முன்வைத்து தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி – விஜயகாந்த் பேச்சு

மதுரை : ”தமிழகத்தில் மக்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது,” என மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியினர் திருமணவிழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:ஜெ., இறப்பிற்கு பின், தர்மத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பதவிக்காக முதல்வர் பழனிசாமி பின்னால் சென்றுவிட்டார். அவரது கொள்கை எங்கே போயிற்று. ஏழைகளுக்கு உதவாத ஆட்சி நடக்கிறது. வெற்றி பெற்று மக்களை வஞ்சிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் […]

என்னை தடுக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை

சாரணர் – சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட எச்.ராஜாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள எச்.ராஜா, செப்., 16 ல் நடக்கும் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். சாரணர் – சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது […]

நீட்டுக்காக போராட வேண்டிய அவசியமில்லை! கமல் கூறிய புதிய யோசனை

தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி பேசிவரும் கமல்ஹாசன் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீட் தேர்வு பற்றி பேசினார். “இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி, இதில் ஏன் நீட் பற்றி பேசவேண்டும். எப்போதும் பொழுதுபோக்கிகொண்டிருக்க முடியாது. நீட் தேர்வுக்காக நாம் போராட வேண்டிய அவசியமில்லை. நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை நாம் எங்கோ தவறவிட்டுவிட்டோம். இது என் கருத்து, விமர்சனங்களை வரவேற்கிறேன். கல்வி கொள்கைகளை வகுக்கும் உரிமை மாநில […]

அனிதாவின் குடும்பத்துக்கு லாரன்ஸ் செய்த செயல் என்ன தெரியுமா?

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கி இருக்கிறார். நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், […]

திருச்சியில் இன்று பா.ஜ.க பொதுக்கூட்டம்

சென்னை: நீட் க்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளதை வரவேற்கதக்கது என பா.ஜ.க மாநில தலைவர் கூறினார். இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்கதக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்..9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் […]

எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்நிலையில் ஆளுநர் […]

பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை…

சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் […]

அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது – முதல்வர் ஆவேசப் பேச்சு

ஈரோடு: அதிமுக ஆட்சி நிலைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஒரு போதும் நடக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில், அதிமுக அரசு […]

வீட்டுக்குள்ளும் போராட்டம் நடத்தக் கூடாது.. ஆசிரியை சபரிமாலாவுக்கு போலீஸ் எச்சரிக்கை

விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக அரசு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுய்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராடுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மேலும் இன்று ஒருநாள் […]