சென்னை: ஜெனிவாவில் வைகோ மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. எதிர்காலத்தில் இது போல் நிகழா வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு செய்திகள்
ஜெயலலிதா சிகிச்சையின் போது மருத்துவமனையில் நடந்தது என்ன? – அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி
முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற […]
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் என்பது ஒரு அணு அளவு கூட இல்லை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேலூர் கூட்டத்தில் தினகரன் பேசும் போது ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார். அதன்பிறகு தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஜீவனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள்தான் இருக்கிறதே தவிர அது உண்மை கிடையாது. புரட்சித் தலைவி ஜெயலலிதா ஒரு முதல்-அமைச்சர். சிகிச்சை பெற்ற இடம் […]
சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நைட்டி உடையில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை – டிடிவி தினகரன்
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். […]
அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுக்குழுவை கூட்டுவேன் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது அரசியலை, சினிமா போல நினைக்கிறார் கமல்ஹாசன். டிவிட்டரில் மட்டும் இருந்தால் முதலமைச்சராக முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜெயலலிதா மரணத்தில் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அரசோடு […]
திருச்சி வருமான வரி அலுவலகத்தில் செந்தில்பாலாஜியின் நண்பர் – நிதி நிறுவன ஊழியர்கள் நேரில் ஆஜர்
கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி முதல் முகாமிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான தாரணி சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல கோடி மதிப்பிலான பினாமி சொத்து குறித்த ஆவணங்கள், ரொக்கப்பணம், […]
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமா
மதுரை வண்டியூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- அ.தி.மு.க.வில் இரு அணிகளும் கருத்து வேறுபாடுகளை அகற்றி இணைந்து விட்டது. இதனால் சீரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள். மக்களிடம் பொய்களை பரப்பி வருகிறார்கள். மேலும் பாரதிய […]
ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்
திண்டுக்கல்: மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி. தினகரன் குடகில் பதிலளித்து பேசும் போது, அமைச்சர் சீனிவாசன் பதவி […]
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.6ல் நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவு
நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் வெற்றி பெற்றார்கள். இதன் பின் நடிகர் சங்க கட்டிடம் உருவாக்குவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தனியார் டிவி நிறுவனம் ஒளிபரப்பியது. […]





