தமிழ்நாடு செய்திகள்

பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் செய்யப்படும் விளம்பரங்களில் உயிர் உள்ளவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. அப்படி செய்தால்தான், […]

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வேட்புமனு நிராகரிப்பால் விஷால் எடுத்த அதிரடி முடிவு..! ரஜினி, கமலை எல்லாம் மிஞ்சி விட்டார்…!!

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தேர்தல் வரும் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல் செய்தார். ஆனால் நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார். அதனையடுத்து யாரையும் ஆதரிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டார். எனவே இவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் அவர் […]

ஆர்.கே.நகரில் ராப் ஸ்டைலில் தெறிக்கவிடும் அதிமுக தீம் சாங்

ஆர்.கே.நகரில் பிரசாத்துக்கு பயன்படுத்துவதற்காக அதிமுக சார்பில் தீம் சாங் ஒன்று உருவாக்கப்பட்டு ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு யாருக்கும் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பிரசாரங்களில் பாடல்கள் ஒலிக்கப்படுவது […]

தினகரனின் குக்கர் பழைய இரும்புக்கடைக்குத்தன் போகும்:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டவுடனே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் மேலும் எதிரிகளுக்கு பிரஷரை வரவழைக்கவே பிரஷர் குக்கர் சின்னம் பெற்றதாக கூறினார். அவர் கையில் குக்கரை வைத்துக்கொண்டே பிரச்சாரம் செய்வத் அத்தொகுதி மக்களை கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் […]

மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து […]

தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் […]

ஆர் கே நகர் தேர்தலுக்காக இன்று 3 மணிக்குள் விஷால் மேற்கொள்ளும் யுத்தம் !

நடிகர் விஷால் ஆர் கே நகர் தேர்தலில் சுயாட்சியாக கடந்த வாரம் களம் இறங்கினர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு அதிர்ச்சியாக கையெழுத்து போலி என மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம். இப்பிரச்சனை கடந்த இரண்டுநாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது .விஷால் தன பக்கம் இருக்கும் நியாயத்தையும் , ஆதாரத்தையும் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நேற்று தேர்தல் அணையும் ராஜேஷ் லகானி யிடம் நடந்ததை சொல்லி மேல்முறையீடு […]

சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் […]