தமிழ்நாடு செய்திகள்

தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி […]

ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்!

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில். வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மீண்டும் அனைத்து கட்சி கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி பொது கூட்டத்தில் திமுக ,காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே ஜனவரி 27 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழக அரசு அறிவித்த […]

ஒரே ஊசியில் பலருக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்..

மலிவான கட்டணம் என அறிவித்து ஒரே ஊசியை தொடர்ந்து பலருக்கும் செலுத்தி ஹெச்.ஐ.வி கிருமி தொற்றை ஒரு மருத்துவர் ஏற்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு தொண்டு நிறுவனம் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அப்போது, அந்த கிராமங்களில் வசிக்கும் 21 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் […]

காதல் கணவர் செய்ய முயன்ற கொடூரம்!

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த ஒருவர் அந்த பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் அவரது தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர் கேரளா மாநிலத்துக்கு திரும்பினார். இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே ரியாஸ் என்ற நபருடன் காதல் இருந்து வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் ரியாஸை அவர் திருமணம் […]

அதிமுக பொதுச் செயலாளர்

ஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு!

இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் […]

ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் […]

​முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வலது கண்ணில் புரை இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் பழனிசாமிக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது கண்ணில் புரை அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இன்னும் 4 நாட்கள் […]

போதையில் இளம் பெண்களுடன் ஆட்டம் போட்ட பாரதிராஜா

தமிழ் சினிமாவுல தண்ணி அடிக்காத மனுஷன பாக்கவே முடியாது போல. எல்லா விஷயங்களுக்கும் வியாக்கனம் பேசும் இயக்குனர் பாரதிராஜா செம குத்தாட்டம் ஒன்னு போட்ருக்காரு. அதாங்க செமய்யா சரக்கு அடிச்சிட்டு பொண்ணுங்க கூட குத்தாட்டம் போட்ருக்காரு. அந்த வீடியோ எப்படியோ நெட்ல வர, நம்ம பசங்க சும்மா விடுவாங்களா. தாறுமாறா டிரண்ட் ஆகிடுச்சு.

கச்சத்தீவை - சுப்பிரமணியன் சுவாமி

பணம் வாங்காமல் தேர்தல் நடத்தினால் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும்

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார். 2ஜி வழக்கில் […]

அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கம்!

கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத் குமார், மாவட்ட […]