தமிழ்நாடு செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலை நிர்வகிக்க, மாநில அளவிலான குழுவை அமைப்பதுடன், தீ விபத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவிலில் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை […]

அஜித் தான் அடுத்த முதலமைச்சர், அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபலம்

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ரசிகர். இவருக்கு என்று உலகம் முழுவதும் பல தமிழ் மக்கள் ரசிகர்களாக உள்ளனர். அஜித் அரசியலில் இல்லை என்றாலும் அரசியலில் அஜித் பெயர் எப்போதும் அடிப்படும். சமீபத்தில் பிரபல ஜோதிடர் அசோக் ஜி என்பவர் ‘அஜித்தின் ரசிகர்கள் தான் இருப்பதிலேயே மிகவும் வலுவானவர்கள். அதனால், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சக்தி அஜித்திற்கு பெரும்பங்கு உண்டு, கண்டிப்பாக இது நடக்கும் பாருங்கள்’ என்று அவர் […]

10ம் வகுப்பு மாணவரின் உயிரை பறித்த ராகிங்…

திருச்சி மாவட்டம் நெருஞ்சலக்குடி ஊராட்சியில் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார் ரஞ்சித் என்ற மாணவர். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஞ்சித் வீட்டில் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சாவிற்கு காரணமான 4 மாணவர்களின் பெயரை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது […]

பக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் பஜ்ஜியை சுடுகிறார்

இந்திய அளவில் பக்கோடா என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை டிரெண்ட் ஆக்கி விட்ட பெருமை அத்தனையும் நமது பிரதமரையே சேரும். இதில் கூகுளில் பக்கோடா என தேடியதில் தமிழகமும், புதுச்சேரியும் முன்னிலையில் உள்ளது. பிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து பேசியபோது, ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதுவும் வேலைவாய்ப்புதானே என கூறியிருந்தார். அவ்வளவு தான் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை […]

எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் அராஜகம் (வீடியோ இணைப்பு)

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் பத்திரிகையாளர் ஒருவரின் கேமராவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் மீது ஊழல் வழக்கு ஒன்று உள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை பெற இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு வந்தார் எச்.சுந்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளரையும், அவரது கேமராவையும் அவர் தாக்க முயன்றார் அப்போது அந்த […]

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்

மேலும், தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு […]

தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி […]

ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்!

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில். வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மீண்டும் அனைத்து கட்சி கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி பொது கூட்டத்தில் திமுக ,காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே ஜனவரி 27 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழக அரசு அறிவித்த […]

ஒரே ஊசியில் பலருக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்..

மலிவான கட்டணம் என அறிவித்து ஒரே ஊசியை தொடர்ந்து பலருக்கும் செலுத்தி ஹெச்.ஐ.வி கிருமி தொற்றை ஒரு மருத்துவர் ஏற்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு தொண்டு நிறுவனம் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அப்போது, அந்த கிராமங்களில் வசிக்கும் 21 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் […]

காதல் கணவர் செய்ய முயன்ற கொடூரம்!

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த ஒருவர் அந்த பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் அவரது தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர் கேரளா மாநிலத்துக்கு திரும்பினார். இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே ரியாஸ் என்ற நபருடன் காதல் இருந்து வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் ரியாஸை அவர் திருமணம் […]