நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் […]
முக்கிய செய்திகள்
Head News
தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் பரீட்சை!!
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 7 அல்லது 8ஆம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பெறுபேறுகளுக்கமைவாக மாணவர்களின் திறமைகளுக்கேற்ப ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில் கல்வியியலாளர்களின் வழிகாட்டலில் அந்தப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கொடகம சுபாரதி மகா மாத்ய வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று அரசதலைவர் […]
இன்றைய ராசிபலன் 03.04.2019
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களின் […]
கூட்டமைப்பை அவசரமாக சந்திக்கும் ரணில்!
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், […]
ரணிலுடன் இணைய மாட்டோம்! சு.கவின் முக்கியஸ்தர்கள் பிடிவாதம்…
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பதுளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணையாது என அவர் கூறியுள்ளார். எதிர்த்தரப்பிலிருந்து யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு […]
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை அமுல்
கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபாய் அறவிடப்பட்டு வந்தநிலையில், அந்த கட்டணம் 3500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா […]
மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் மைத்திரியின் முக்கிய அறிவித்தல்
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார். யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என அவர் கூறியிருந்தார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி […]
தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகளே அதிக அக்கறை உடையவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள். இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ […]
இன்றைய ராசிபலன் 01.04.2019
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மரியா தைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி […]
சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் மே தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.





