தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகளே அதிக அக்கறை உடையவர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள்.

இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இவர்களுக்கு 20 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது’ என தெரிவித்துள்ளார்.