யாழ். மாதகல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு வெளியிட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி […]
முக்கிய செய்திகள்
Head News
இன்றைய ராசிபலன் 13.04.2019
மேஷம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம்: இன்று எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது […]
கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை விரைவில் ரத்து
அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய அவரை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இந்த விடயம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த […]
புதிய கட்சி ஒன்றை உருவாக்கியது ஏன் – மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கால்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் […]
அமெரிக்கா பறந்தார் நிதியமைச்சர் மங்கள!!
நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி ராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர். நிதியமைச்சர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் 4,142 ஏக்கர் நிலம் படையினரின் வசம் !!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பது மாவட்டச் செயலகங்களின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நில விடுவிப்பு சம்பந்தமான தற்போதைய நிலைமை, மற்றும் தீர்வுகள்பற்றி மக்கள் பிரதிநிதிகள், படையினர் இடையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் […]
சூழ்ச்சிகளிற்கு காரணம் பிரதமர் ரணிலாம்
மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போடும் சூழ்ச்சிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே வகுப்பதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, மக்களின் தேர்தலை உரிமை தொடர்ந்து மீறப்படுவதை கருத்திற் கொண்டு இம்முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்த நாங்கள் இணக்கம் தெரிவித்தோம். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். தற்போது 07 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத […]
இன்றைய ராசிபலன் 12.04.2019
மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம்: இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் […]
ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என […]
சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா ?
அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை. அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபரின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் […]





