மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி […]
முக்கிய செய்திகள்
Head News
மைத்திரி வெளியிட்டுள்ள அதிரடி கருத்து
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதனை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக […]
மேஜர் பசீலனின் தாயாருக்கு சி.சிறிதரன் அஞ்சலி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் தாயார் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்த அன்னாரின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவில் வசித்து வந்த பசீலனின் தாயாரான நல்லையா தங்கம்மா சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலகமே வியந்த ஒப்பற்ற தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தளபதியாக மேஜர் பசீலன் செயற்பட்டிருந்தார். […]
மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை
நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் […]
அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!!
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. தீ வீடுகளுக்குள் பரவாதிருக்க ஈரமான சாக்குகளைப் போட்டு தடுக்கப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர்.
குடியுரிமையை துறக்கப் போன இடத்தில் கோத்தபாயவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக கருதப்படும் நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, அவரது குடியுரிமை துறப்பில் செல்வாக்கு செலுத்துமா என்பது இனிவரும் நாட்களிலேயே தெரிய வரும். […]
இன்றைய ராசிபலன் 08.04.2019
மேஷம்: மாலை 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் உங்களுடைய பலம் என்று மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக்கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடை யின்றி முடியும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 3.30 […]
புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!
ஈழத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியர் புலம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் பின்லாந்தில் வசித்து வந்த நிலையில் அவரின் மகன் குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் , கடந்த 27.03.2019 அன்று குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவர் கடந்த வியாழக்கிழமை காலையில் சிகிச்சை […]
சம்பந்தனிற்கு அட்வைஸ் செய்யும் ஆனந்தசங்கரி!
இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஆடம்பர பங்களா உள்ளிட்ட சொகுசு வசதிகளை பெற வேண்டாமென கடிதம் மூலம் கோரியுள்ளார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. இரா.சம்பந்தனிற்கு, “தயவுசெய்து திரும்பிப் பாருங்கள்“ என்ற தலைப்பில் இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்- தங்களுடனும், எமது மக்களுடனும் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சார்பாக எனது கருத்தைத் தெரிவிக்காது அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இதை அவசரஅவசரமாக எழுதும் நோக்கம், […]
இலங்கை வாழ் மக்களுக்கு மின்சாரம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் முழுமையான மின் தேவையை நிறைவு செய்ய 300 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம், மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ‘நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் காணப்படுகின்றதுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் […]





