முக்கிய செய்திகள்

Head News

உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

மீகஹத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், குண்டு வெடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது, உணவக உரிமையாளரும், பணியாளர் ஒருவரும் மட்டுமே அங்கிருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் , வெடிக்காத கைக்குண்டை மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்

மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு […]

சுந்தர்பிச்சை

உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்கு சுந்தர் பிச்சை தெரிவு!

உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை மற்றும் அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். அடினா பிரீட்மேனி அமெரிக்க பங்குச் சந்தை தலைவர் ஆவார் . இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள, ‘இந்தியா ஐடியா’ மாநாட்டில் , இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்த கனடிய தூதர்!

கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்திதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை

இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாகவும் , தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் வட மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இடையில் இன்று கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தலைமைகள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.06.2019

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பணக்கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, […]

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது கல்வீச்சு

கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸார் பாதுகாப்பிற்கு இருந்த போதும் கல்வீச்சு தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பௌத்த மதகுருவுக்கு ஒரு நீதி! நமக்கு ஒரு நீதியா? – கேப்பாபிலவு மக்கள்

மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் 828 நாட்களாக நிலமீட்பு போராட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிந்லியில் நேற்றை தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுருவிற்கு ஆதரவாக பலர் கோசமெழுப்பியிருந்ததாகவும், ஆனால் […]

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது

சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று இராஜினாமா செய்திருந்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன மத ரீதியிலும் எண்ணிக்கையிலும் குறைந்த சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்கின்றோம். முஸ்லிம் தலைமைகள் மீண்டும் […]

மகிந்த

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்ற உள்ள மகிந்த!

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது. குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற உள்ளது. இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் […]