இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹைதராபாத் ஹவுசில் நேற்று காலை 10.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி […]
முக்கிய செய்திகள்
Head News
ஆறாத வடு! யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள்!
தெற்காசியாவின் ஆசியாவின் அறிவுக் கருவூலமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எரிந்த தீ அணைந்துவிட்டாலும் தமிழர்களின் மனதில் அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாமல் எரிந்துகொண்டிருக்கிறது. 1981ம் ஆண்டு. சிங்கள பேரினவாதம் தமிழர்களின் மேல் அடக்குமுறைகளையும், அடாவடித்தனங்களையும், கட்டவிழ்த்துக்கொண்டிருந்த காலப்பகுதி. குறித்த ஆண்டின் மே மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவில், தமிழ் தலைமுறைகளின் மேல் ஊற்றப்பட்ட எரிதலாக, காதுகளில் வந்து விழுந்த […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டம் இன்றுமதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது . இதேவேளை வவுனியாவில் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மைத்திரிக்கு வருகிறது பெரும் சிக்கல்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றம் சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்புக்கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21/4 […]
இன்றைய ராசிபலன் 01.06.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை […]
தமிழ் அரசு கட்சி முக்கிய கூட்டம் நாளை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு வரும் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாட்டை நடத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை காலை கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும், நாளை பிற்பகல் மாட்டின் வீதியில் உள்ள […]
தீவிரவாதிகளிற்கு எதிராக யாழில் முஸ்லிம்கள் போராட்டம்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலின் போது ஐ. தே. கட்சி வேட்பாளரை இறக்குமதி செய்யாது
ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை வேட்பாளரை இறக்குமதி செய்யாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். அதோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஐ. தே. கட்சியின் வேட்பாளர் ஒருவரே இம்முறை […]
அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் இல்லை
ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் களமிறக்கவில்லை எனவும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பில் மட்டுமே இலங்கை உள்ளதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நெருக்கடி நிலைமைகளை அடுத்து இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை எனவும், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப்படைகள் […]
சிக்கிய தீவிரவாதியின் தற்போதைய நிலை என்ன?
குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. கண்டி – அலவத்துகொட, […]





