முக்கிய செய்திகள்

Head News

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்: பொதுச்சுடர் ஏற்றி அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் ஓரணியாக நாளை சுடரேற்றுவோம்! – சம்பந்தன் அழைப்பு

“தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று, அரச படைகளால் முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும்.” – இவ்வாறு கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஈழத்தில் அரச படைகளால் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட மிகப்பெரும் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது. […]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க படையினர் தீவிரம்

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமிழர் தாயகத்தில் நாளை (வியாழக்கிழமை) உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தடுக்க படையினர் முயற்சிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டடு வரும் நிலையில், இது குறித்து தென்னிலங்கையில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடக்கு கிழக்கில் மக்களை படையினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு, நினைவேந்தல் […]

வட மத்திய மாகாணத்தின் அமைச்சராக சுசில் குணரத்ன நியமனம்

வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுசில் குணரத்ன வட மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். முன்னர் அமைச்சராக இருந்த எஸ்.எம் ரஞ்சித் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின் அமைச்சராகவிருந்த கே.எச். நந்தசேனவை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து முன்னறிவித்தல் இன்றி […]

இலங்கையில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும், பிரதிநிதிகளின் தலைவருமான துங் லாய் மார்க் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் […]

சிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி

சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 8 டொலரினால் (0.21 வீதம்) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு தனிநபர் வருமானம் 3835 டொலர் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடைசியாக […]

மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்! – வடக்கு முதல்வர் விக்கி அழைப்பு

“தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எமது மக்களின் வரலாற்றில் துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து – ஒருமித்து கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தலில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து பங்குபற்ற வேண்டும்.” – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட எமது […]

சிவாஜிலிங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு விளக்கேற்றி படையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த […]

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலவி வந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]

வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு!

வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு!  மைத்திரி அணி வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 17 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளனர். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் […]