இலங்கையில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும், பிரதிநிதிகளின் தலைவருமான துங் லாய் மார்க் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இலங்கை அரசாங்கம் அமுலாக்கி உள்ளதனால் இந் வரிச்சலுகையைப் பெற இலங்கைக்கு தகுதி உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் குழு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *