இன்றைய ராசிபலன் 14.08.2019 மேஷம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் […]
முக்கிய செய்திகள்
Head News
கோத்தபாய ராஜபக்வின் வெள்ளை வான்களுக்கெதிராக மக்களை அணி திரட்டுவோம்
கோத்தபாய ராஜபக்ஷவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளை கைவிட்டு விட்டு நாட்டைவிட்டு ஒரு போதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷவை தோற்கடிக்கும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் […]
உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாது
உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா […]
இன்றைய ராசிபலன் 12.08.2019
இன்றைய ராசிபலன் 12.08.2019 மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக் கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்குஅங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை […]
காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு
காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்ற வருமான மலாலா நேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகின்ற நிலையில், இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா உருக்கமான பதிவு ஒன்றை […]
எனது வெற்றிக்கு தமிழ் மக்கள் தேவை : கோத்தபாய
எனது வெற்றிக்கு தமிழ் மக்களது வாக்கு அவசியம் இல்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோத்தபாய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருந்தார். இதன்போது தமிழ் மக்களின் வாக்குகள் […]
எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக் கூடியவரே-ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்
எதிரணி வேட்பாளரை தோற்கடிக் கக்கூடிய, பலமிக்க ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பலர் உள்ளனர். பிரதமர் ரணில் […]
ஒழுக்கமும் கட்டுப்பாடும் பிரபாகரனிடம் நிறைந்திருந்தது-மகிந்த
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்திருந்ததென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைப் புரிந்து கொண்டே அரசியல் தீர்வுத் திட்டத்தை தேட வேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு […]
இன்றைய ராசிபலன் 11.08.2019
இன்றைய ராசிபலன் 11.08.2019 மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், […]
விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி
விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25-ந்தேதி, உயிரினங்கள் குறித்த […]





