இலங்கை செய்திகள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் - ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏனைய மாகாணங்களை விட அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது தொழில்களை […]

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்கா

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஸ்ரீலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை இந்த முறையும் அமெரிக்காவே, ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி, மார்ச் 24 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், ஸ்ரீலங்கா தொடர்பான […]

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன்

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் – மைத்திரி

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் – மைத்திரி நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகம் உதவியிருந்தால் பிரபாகரன் என்ற ஒருவர் உருவாகியிருக்க மாட்டாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அரச சட்டத்தரணியும் செனட் சபையின் முன்னாள் உறுப்பினருமான எச்.ஸ்ரீ.நிஸ்ஸங்கவின் 63ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) […]

சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அனந்தி சசிதரன்

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழர்களை ஏமாற்ற முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் வழங்குவதானது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையுமெனவும் அவர் வலியுறுத்தினார். “வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல்“ இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை […]

கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம்

கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம்

கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம் தமது எதிர்காலம் தொடர்பில் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மாணவர்கள் ஏங்கிநிற்கின்றனர். சட்டத்தரணியாகும் தமது கனவு மற்றும் தமது கல்வி தொடர்ச்சியான நிலமீட்புப் போராட்டத்தினால் சீரழிந்து செல்லதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று போராட்டம் 28 ஆவது நாளாக எந்தவொரு […]

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]

தமிழீழ விடுதலைப்புலிகள் - எஸ்.ஜே.சாந்தன்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிளப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிளப்பு பாடகர் எஸ்.ஜே.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.10 அளவில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பாடகர் சாந்தனுக்கு இன்று இருதடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை […]

அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை

உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை

உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை தேசிய அரசினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் இதுவரை வெளிவராத பல்வேறு உண்மைகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளவருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அரசின் செயற்பாடுகளால் மங்களின் மனங்களை வெல்ல முடியாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக அரசு முன்னெடுத்துவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் […]

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய ராஜபக்ச ஆதங்கம்

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தாபய ராஜபக்ச ஆதங்கம் மேற்குலகின் தலையீடுகளால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராக செயற்பட முடிவு செய்தது என்றும் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை தாம் ஆரம்பத்திலேயே புரிந்து […]

நல்லிணக்கப் பொறிமுறை - எஸ்.சிவமோகன்

நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன்

நல்லிணக்கப் பொறிமுறை பொருத்தமற்றது – எஸ்.சிவமோகன் தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மையைக் கண்டறியும் நல்லிணக்கப் பொறிமுறையானது இலங்கைக்கு பொருந்தாதென ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். அத்துடன் தென்னாபிரிக்காவில் இப்பொறிமுறை செயற்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஆபிரிக்கர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால் இங்கு சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத்தவரையில் அப்பொறிமுறையின் விசாரணைகள் பக்கச்சார்பானதாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். எனவே அனைத்துத் தரப்பில் இருந்தும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதே பொருத்தமான வழியாகும் […]