வடமாகாண சபை மீது ஆளும்கட்சி உறுப்பினர் சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை தட்டிக்கழித்ததே வட மாகாண சபை இதுவரை செய்த பெரும் சாதனை என வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு […]
இலங்கை செய்திகள்
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில், ஒன்றரை வயது நிரம்பிய சிறுமியொருவர் வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கமலதாசன் சீதையம்மாள் அவர்களின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் தாயார் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதுடன், உடனடியாக பாதிப்புக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக […]
மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள்
மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய பிரதேசங்களில் மின்னிணைப்பு வசதிகளை இன்று (வியாழக்கிழமை) வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கிவைத்தார். ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகியவற்றிற்கான மின்னிணைப்பு வசதிகளை அமைச்சர் தனது நிதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே இருந்து வழங்கியிருந்தார். அத்துடன் தமக்கு நிலவிய நீண்டகாலத் தேவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், […]
தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது
தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் இருவேறு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 9 பேர் வடமராட்சி வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து படகொன்றில் […]
விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி
விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகளைத் தோற்றுவித்து குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வாறானவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மேல் மாகாண முதலமைச்சருமான இசுறு தேவப்பிரிய பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் […]
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்: ரதன தேரர்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்: ரதன தேரர் வடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்ற நிலையில், இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களுக்கு […]
இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா தோல்வி
இனப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா தோல்வி தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் பிரித்தாலும் தந்திரத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையாள்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நிழல் அமைச்சரவையின் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல்ட் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் உள்ளக விசாரணையை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமையை […]
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவத நாளாக மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல
ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல ஐ.ந மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையில் […]
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட […]





