தேசிய அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு […]
இலங்கை செய்திகள்
சம்பந்தன் – விக்கி சந்திப்பு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான பேச்சின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எனத் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் […]
யாழ். துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நீதித்துறை மீதான தாக்குதல்: சிவஞானம்
நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தினதும், நீதித்துறை மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும் என வட.மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட […]
யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலி!
யாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைத்தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார். இவர் கடந்த 17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார் […]
சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்
அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே […]
ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேரத்ன, ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலான இசுமோ மற்றும் சசகாமி ஆகிய போர்க்கப்பல்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன் போது சிறிலங்கா பாதுகாப்பு […]
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! – மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயம்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் […]
பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது. இதன்படி மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், […]
புதிய அரசமைப்பு உருவாவதைத் தடுக்க மஹிந்த அணியினர் இருமுனைத் தாக்குதல்!
புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் […]
உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் யானைச் சின்னத்திலேயே களமிறங்கும்! – கூட்டமைப்பு , ஜே.வி.பி. தனிவழிப்பயணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், […]





