முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை மீளவும் நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் காணிகள் மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் […]
இலங்கை செய்திகள்
காணாமல்போனோர் குறித்தும் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “காணாமல்போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் […]
நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார்
யாழ்.நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் அரசு ஆழகாக சிந்தித்துச்செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “யாழ்ப்பாணத்தில் பொலிஸ்அதிகாரிகள் இருவர் […]
நீதிபதி இளஞ்செழியன் மீதான தாகுத்தல்: மல்வத்து பீடமும் கடும் கண்டனம்!
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, பௌத்த மக்களின் முக்கிய பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. “இந்த ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆயுதங்களால் அதனை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச […]
யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை பிடிக்க இரு விசேட குழுக்கள்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சூப்பாக்கிச் சூட்டுடன் […]
நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சபூர்தின்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சனிக்கிழமை மாலை நல்லூரில் நீதவான் இளஞ்செழியனை […]
அர்ஜூன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு
மத்திய வங்கி முறி விசாரணை தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் திறைசேரி முறி விநியோகம் தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது வழங்கப்பட்ட சாட்சிக்கு அமைவாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை, 2015 தொடக்கம் […]
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தொடர்ந்தும் உதவுவோம்: கனேடிய பிரதமர்
போரினால் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த இலங்கைத் தமிழர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடியா குறிப்பிட்டுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் பொறுப்புக் கூறலானது அவசியம் என ஜஸ்ட்டின் வலியுருத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட […]
இளஞ்செழியன் உட்பட அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணம்செய்தவேளை நேற்றுமுன்தினம் மாலை நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட […]





