இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் கல்லறைகளைக் கட்டியணைத்துக் கதறிய உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட மாவீரர்களின் உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்துக் கல்லறைகளைக் கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள் அதனைக் கட்டியணைத்துக் […]

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை […]

அரசியலுக்கு வர ஆசைப்படும் பொலிஸ்மா அதிபர்! பிரதமரிடம் நிபந்தனை விதிப்பு

கடமையில் இருந்த கீழ் நிலை அதிகாரியை தாக்கியமை, சித்திரவதை மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலக நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் கீழ் நிலை அதிகாரியை தாக்கும் காணொளி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொலிஸ்மா அதிபரை அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கௌரவமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார். தான் பதவி […]

ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை […]

விடுதலைப் புலிகளை பழி தீர்த்ததா இந்தியா? உண்மையை கூறிய கோத்தபாய

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளே படுகொலை செய்ததாக கூறுகின்றீர்கள். இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளித்ததாகவும் கூறுகின்றீர்கள், அந்த காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளே […]

ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் – நிமல் சிறிபால டி சில்வா

ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தால், ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தரமான ரயில் சேவையை வழங்க சகல தொழிற்சங்கங்களும் புதிய ரயில்வே முகாமையாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தான் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தொழிற்சங்க பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு […]

தியாக தீபம் திலீபனின் தூபியைத் துப்புரவாக்கும் பணி நல்லூரில்!

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று துப்புரவு செய்துள்ளனர். தியாக தீபத்தின் நினைவுநாளை கடந்த வருடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் துப்புரவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி […]

கூட்டு எதிர்க்கட்சி பொது வேட்பாளரை நிறுத்தாது

கூட்டு எதிர்க்கட்சி எப்போது பொது வேட்பாளரை நிறுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்சவுக்கு சார்பாக […]

மைத்திரியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட விஜயதாச! கட்சியில் தொடர்வதாக அறிவிப்பு

அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். விஜேதாச ராஜபக்சவை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய […]