இலங்கை செய்திகள்

மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்…

இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை. 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது […]

10 நிமிடத்தில் காப்பாற்றுகிறேன் என சிறிகஜன் கூறினார்! வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் சாட்சியம்

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார். மாணவி கொலை […]

இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய கண்காணிப்பு விமானம்!

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டே இலங்கை வான் பரப்பில் பிரவேசித்து தேடுதல் நடத்தியுள்ளதாக இந்திய கடற்படையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிய கப்பல் ஒன்று தென்திசை வழியாக தப்பிச் சென்றிருந்தது. குறித்த கப்பலானது ஹொங்கொங்கில் […]

இலங்கை அணியின் தொடர் தோல்வி! ஜயசூரிய எடுத்த திடீர் முடிவு

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகல் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று பகல் இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அண்மை காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையிலேயே, தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு […]

சட்டத்தரணிகளை தமது செலவில் வியட்நாம் அழைத்துச் சென்ற நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்சவிற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் குழுவை நாமல் ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் முதலாவது இலக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதியான கிஹான் குலதுங்கவை கொழும்பில் இருந்து இடமாற்றம் செய்வதாகும். […]

அமைச்சரவைக் கூட்டத்தில் மோதிக் கொண்ட அமைச்சர்கள்

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கின் செயற்கை ஓடுதளத்தை மீண்டும் புனரமைப்பதற்காக தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கருத்துக்களை முன்வைக்கும் போது இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தமாக […]

’20’ ஐ நிறைவேற்றுவதில் இழுபறி! முதலமைச்சர்களுடன் மைத்திரி அவசர சந்திப்பு!!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான ஆதரவை வழங்கும் விடயத்தில் மாகாண சபைகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் அவசரமானதும், முக்கியத்துவமானதுமான சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான […]

கிழக்கில் இன்று ’20’ நிறைவேறும்? 

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என்பது குறித்து கிழக்கு மாகாண சபையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குறித்த சட்டத்திருத்தத்துக்கு வடமத்திய மாகாண சபை ஆதரவையும், ஊவா மாகாண சபை எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தன. நேற்று மேல்மாகாண சபையில் நடைபெற்ற அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபையில் இன்று இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. […]

ராஜிதவுக்கு எதிரான பிரேரணை வலுவிழப்பு!

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்ட ரீதியாக வலுவிழந்த ஒரு பிரேரணையாகக் காணப்படுகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா […]

ராஜிதவுக்கு எதிரான பிரேரணையை சு.க. கடுமையாக எதிர்க்கும்! – எஸ்.பி. திட்டவட்டம்

“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது”  என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 15 காரணங்களை உள்ளடக்கி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த ராஜித சேனாரத்ன, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் தனது […]