மைத்திரியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட விஜயதாச! கட்சியில் தொடர்வதாக அறிவிப்பு

விஜயதாஸ ராஜபக்ஷ

அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தார்.

விஜேதாச ராஜபக்சவை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் நேற்று தெரிவித்திருந்தார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *