இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் […]

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு: தமிழரசுக் கட்சியுடன் ரெலோ நாளை முக்கிய பேச்சு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்திருந்தது. தமிழரசுக் கட்சியிடம் அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது

சு.க. உறுப்பினர்களுடன் தனித்தனியே மைத்திரி இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நீர்க்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளமை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருவதாலும், மேலும் சிலர் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டுவருவதாலும் கட்சியை முன்நோக்கி அழைத்துச்செல்வதில் […]

மஹிந்தவை வளைக்க மறுபடியும் ‘கதிரை’! – திட்டத்தை தூக்கி வீசினார் மைத்திரி

பொதுஜன ஐக்கிய முன்னணி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை’ சின்னத்தில் களமிறங்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட திட்டமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்திலேயே […]

2020இல் ஆட்சியைக் கைப்பற்ற பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க ஜே.வி.பி. தீவிரம்!

2020ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி. நாட்டிலுள்ள சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களுடனும், சிவில் அமைப்புகளிடனும், கல்விமான்களிடனும் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக எதிர்க்கும் ஜே.வி.பி., பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சியைக் கொண்டுவரும் முனைப்புடன் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர அரசுடன் ஒன்றிணைந்துச் செயற்பட்டுவருகிறது. மறுபுறத்தில் 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர நகர்வுகளையும் முன்னெடுத்துவருகிறது. அதனடிப்படையில் நாட்டில் […]

கேப்பாப்பிலவு காணி விவகாரம்: பேச்சுக்கு சம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு

கேப்பாப்பிலவு காணி விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள 302 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் கடந்த 215 நாட்களாகத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். காணி விடுவிப்புத் தொடர்பில் கடந்த மே மாதம் […]

வித்தியா கொலை வழக்குத் தீர்ப்பு நீதி தேவதைக்குக் கிடைத்த வெற்றி! – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி  வித்தியா தொடர்பான வழக்குக்கு, நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி தேவதைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். கடந்த காலங்களைவிட தற்போது, அரசின் தலையீடு இல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றது. இது நல்லாட்சியின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகும். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள். சட்டம் அனைவருக்கும் சமனானது என இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் […]

போர்க்குற்றச்சாட்டு: ஐ.நாவுடன் பகிரங்க விவாதத்துக்கு தயார்! – இலங்கை இராணுவத் தளபதி அறிவிப்பு

“இலங்கைப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” இவ்வாறு  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்தார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இராணுமானது எவ்வாறு ஒழுக்க விழுமியத்துடன் […]

அத்தியாவசியப் பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு! – அரசு அறிவிப்பு

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் […]

ரோஹிங்யா முஸ்லிம்களை அரசு கைவிடவே கூடாது! – மஹிந்த தெரிவிப்பு

“அகதிகளாக வந்தவர்களை நாம் கைவிடக்கூடாது: அது இலங்கையின் கலாசாரமும் அல்ல. எனவே, சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டிருக்காது அந்த மக்களை அரசு பாதுகாக்கவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள வீட்டை சுற்றிவளைத்த குழுவொன்று அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதுடன், அடாவடிச் செயலிலும் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் வினவியபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் […]