வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது. வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர். அவர்களில் பலர் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட தகமைகளை நிறைவு […]
இலங்கை செய்திகள்
அப்பாவிச் சிங்களவர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்! – சம்பந்தன்
புதிய அரசமைப்புத் தொடர்பில் அப்பாவி சிங்கள மக்களை நீங்கள் தவறாக வழிநடத்துகின்றீர்கள் என்று மஹிந்த அணியைச் சேர்ந்த ஜி.எல்.பீரிஸிடம் நேருக்கு நேர் காட்டமாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாக, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்தக் குற்றச்சாட்டை ஜி.எல்.பீரிஸிடம் முன்வைத்ததாக அது […]
புதிய அரசமைப்புக்கு எதிரான கோட்டாவின் வியூகத்தை முறியடிக்க முப்படையினரையும் நாடுகின்றது அரசு!
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது நாட்டைக் கூறுபோடுவதற்கான ஆரம்பகட்டம் என்றும், அது படையினருக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரப்போரை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஆரம்பகட்ட வியூகமாக அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முப்படையினருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் சட்டப்பணியகத்தின் உதவியுடனும், சட்டவல்லுநர்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அண்மையில் இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கு கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது. […]
ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது! – சமஷ்டிக்கு இடமில்லை
“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் சிபாரிசுகளின் பிரகாரம் இலங்கை பிளவுபடாததும் பிரிக்கமுடியாததுமான நாடாக காணப்படுகின்றது. அத்துடன், ஒற்றையாட்சி கட்டமைப்பும் முன்பிருந்ததைவிட பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். அத்துடன், அதிகாரப்பகிர்வு குறித்து நாட்டில் தவறான முன்னுதாரணங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், சமஷ்டி என்ற அம்சம் (இலட்சனை) இடைக்கால அறிக்கையில் எங்கும் கூறப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். […]
நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு!
இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் முதன்முறையாக 1947 ஒக்ரோபர் 14ஆம் திகதி சபாநாயகர் அல்பிரெட் பிரான்சிஸ் மொலமூர் அல்பேர்ட் பீரிஸ் தலைமையில் கூட்டப்பட்டிருந்தது. 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 20ஆம் திகதிவரையான 19 நாட்கள் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றனர். நான்கு ஆண்டுகள் ஐந்து […]
சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதம்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் […]
அடைக்கலம் தேடிவரும் அகதிகளை விரட்டியடிப்பது சர்வதேச குற்றம்!
“ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடிவருபவர்களை விரட்டியடிப்பது சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். எனவே, மியன்மாரில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.” – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது பௌத்த பிக்குமாரும், சிங்கள இனவாதிகளும் நடத்திய அராஜகச் செயற்பாடுகள் […]
வடக்கு – கிழக்கு இணைப்பு: பேச்சு நடத்த முஸ்லிம் சகோதரர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புத் தொடர்பில் உரையாற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் மன்னார் மாவட்ட மக்களோடு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கை குழுவின் அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது இறுதியானது அல்ல. அதேநேரம் இந்த […]
யாழ்.காரைநகரில் கடற்படையின் படகு மோதி மீனவர் ஒருவர் பலி!
யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது – 38) […]
பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!
“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு […]





