இலங்கை செய்திகள்

மன்னாரை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய அச்சுறுத்தல்: கடந்த வருடத்தை விட பாதிப்பு அதிகம்

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்த மலேரியா அச்சுறுத்தல் தற்போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் […]

எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வழங்கும் மைத்திரி!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதாக சிலர் சிந்திக்கின்றனர். மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் தவறில்லை. வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்னை தான் திட்டுகின்றனர். மருந்து வழங்குவது நான் என நினைக்கின்றார்கள். பாடசாலையில் […]

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல தடை.. மக்களை அச்சுறுத்தும் இராணுவம்!

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும், அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுவதாக மாவீரர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவு கூறவுள்ளதால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்றைய தினம்(06) சென்றுள்ளனர். எனினும், மாவீரர்களின் உறவினர்களை இராணுவத்தினர் மாவீரர் […]

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதனையடுத்து. பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் […]

இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்

இலங்கையில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு பூராகவும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்… இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. அதற்கமைய உந்துருளி ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், சிற்றூர்ந்துகளுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுமிகளை, இலங்கையர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா கான்பரா நகரில் வசிக்கும் சுனில் பட்டகொட என்ற 62 வயதுடைய நபரே, 14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். தற்போது குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கான்பரா நகரில் வசிக்கும் 62 வயதுடைய சுனில் பட்டகொட என்ற […]

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணம் மோசடி! யாழில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். எனினும் பணம் கொடுக்கப்பட்டு […]

மகிந்த

பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.  

வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

யாரும் வரலாம் எவரும் போகலாம்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில் […]