இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி

நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி […]

புலனாய்வாளர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கொன்ஸ்டபிள் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் […]

பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இனி­மேல் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது

நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்­கைக்­கான தென்­னா­பி­ரிக்­கத் தூது­வர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் […]

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!

கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எப்­பல்’ போதை மாத்­தி­ரை­க­ளு­டன் ஒரு­வர் கைது

இளை­யோர் போதைக்­கா­கப் பயன்­ப­டுத்­தும் எப்­பல் எனும் போதை மாத்­தி­ரை­க­ளு­டன் கட­வத்தைப் பேருந்து நிலை­யத்­தில் சந்­தேக நப­ரைத் திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளைத் தடுக்­கும் பிரி­வி­னர் கைது செய்­துள்­ள­னர். திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளைத் தடுக்­கும் சிறப்­புப் பொலிஸ் பிரி­வுக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமை­வாகக் கட­வத்தைப் பேருந்து நிலை­யத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு நட­வ­டிக்­கை­யின் போது சந்­தேக நபர் நேற்றுக் கைது செய்­யப்­பட்டார். அவ­ரி­ட­மி­ருந்து 400 எப்­பல் போதை மாத்­தி­ரை­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர் கம்­பகா மாவட்­டத்­தின் […]

கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.!

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திக்­க­மை­வாக சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­ சபையை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருந்தோம். எனினும் கல்­முனை மாநர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக பிரிக்­கு­மாறு தற்­போது அப்­பி­ர­தேச மக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­களின் அபிப்­பி­ராயம் பெறாது அதனை நிறை­வேற்ற முடி­யாது. ஆகவே தற்­போ­தைக்கு கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் மேற்­கொள்­ளாது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் […]

ஆயுள் தண்டனை

தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் […]

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இன்று 11.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பவர் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்தில் 3 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை ஒழிப்பு பிரிவினர் வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் சோதனை […]

இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தின் இறுதி நாள் இன்று

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்று நாள் விவா­தத்தின் இறுதி நாள் இன்­றாகும்.

அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.