இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி சிறுவன் மரணம் மன்னாரில் சம்பவம்

மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவன் மரணம்-(படம்)   (20-11-2017) மன்னார் முருங்கன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் மின்னல் தாக்கிய 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. -உயிரிழந்த சிறுவன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் வயது(11) என தெரிய வந்துள்ளது. -குறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வயலில் வேளை செய்து கொண்டிருந்த […]

மன்னாரில் இரு இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதோடு, திருடப்பட்டுள்ளது

மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று (18) சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த […]

சிறுமி கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்வு- வவு­னி­யா­வில் கொடூ­ரம்

முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்­த­வர்­க­ளால் கடத்­திச் செல்­லப்­பட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வய­துச் சிறுமி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தற்­கொ­லைக்கு முயன்ற நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப் பட்­டார். இது தொடர்­பில் நால்­வர் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரால் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இந்­தக் கூட்டு வன்­பு­ணர்வு வவு­னியா மாவட்­டத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. வன்­பு­ணர்­வின் பின்­னர் சிறு­மியை குகன் நக­ரில் உள்ள ஆள்­க­ளற்ற வீடு ஒன்­றில் குற்­ற­வா­ளி­கள் அநா­த­ர­வாக விட்­டுச் சென்­ற­னர். ஒரு­வாறு நேற்று வீடு வந்து […]

தப்பியோடிய ஆவா குழுத் தலைவர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில்சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்டநிலையில் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில்இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் […]

நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவின் எதிரொலி! களமிறங்கியது விசேட பொலிஸ் குழு

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி பொலிஸ் குழுக்கள் யாழில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை(14) இரவு யாழ். கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால் மடம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா […]

வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள அவசர பணிப்புரை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் […]

யாழ். பல்கலை

யாழ் .பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நாளை மீள திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினத்திற்குள் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் […]

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம்?

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம் என்பதனை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைவதற்கு மத்திய வங்கியின் சில அதிகாரிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கியின் சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் […]

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மக்களின் பாராட்டினையும் பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் தேசிய நீரிழிவு தின நடைப் பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன […]

மகிந்த

மகிந்தவை வியக்க வைத்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு கண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வியந்து போனதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்சவின் நினைவு தினம் கடந்த வாரம் தங்காலையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். குறித்த நினைவு தின நிகழ்வில் மகிந்தவின் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த இளைஞன் […]