வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது. குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து […]
இலங்கை செய்திகள்
அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!
அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் […]
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி!
தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான கட்சி ஒன்று அவரை சுயாதீனமாக வேட்பாளராக இறக்குவது குறித்து கலந்துரையாடிவருகின்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதேவேளை பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் வாக்குகளை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேனநாயக்கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]
விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் !
விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத்தேடி படையினர் ! கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது இந்த அக்ழ்வினை முன்னெடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் […]
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !
ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி […]
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்
வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை […]
கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு!
கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு! வடக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களையும் புறக்கணித்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை இரா.சம்பந்தன், சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சில் கையளித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிற்கு விசேட அபிவிருத்தி நிதி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்களை சிபாரிசு செய்யும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒரு தொகையினரை புதிதாக நியமிக்க அரசு முடிவு […]
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்! கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக தமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வோம் என தெரிவிக்கவில்லை எனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லை எனவும் […]
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம்
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம் வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு […]





