இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேற்றம்?

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேற்றம்? தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளது. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகித்து வருகின்றது. இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய […]

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து…

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து… எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், தற்போதைய அரசாங்கம் முன்னிறுத்தும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கு மக்கள் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பௌத்த சடங்குளுடன் தொடர்புடையவர்களுடனான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடுகின்றார். ஆனால், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் அவர் […]

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு - அகில விராஜ் காரியவசம்

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அந்தவகையில், 1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச […]

ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில்

ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு!

ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு! ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாகரிகமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் மத்துகமவில் நடந்த நிகழ்வில் ஹேஷா விதானகே உரையாற்றிய போது, சஜித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணிய வேண்டி வருவமென கூறியிருந்தார். இதனால் கோத்தபாய உச்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே இன்று கட்சி […]

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் - ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு […]

சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா

சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா

சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியால் தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக அறிந்ததாகவும் எனினும் அந்த நிபந்தனைகளுக்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய சஜித்துக்கு ஆதரவளிப்பதாகவும் சரியான வெற்றி கிடைப்பது தொடர்பில் […]

நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபப்ட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்திருந்தனர். கடந்த 16 ஆம் திகதி மக்கு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட […]

கொழும்பில் பிரமாண்ட போராட்டம்

கொழும்பில் பிரமாண்ட போராட்டம்

கொழும்பில் பிரமாண்ட போராட்டம் இலங்கை அதிபர், ஆசிர்களின் 30 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது, அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்ண்டெக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், லோட்டஸ் வீதி மூடப்பட்டது. அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த தயாராக […]

கனமழை இலங்கை நாடாளுமன்றம்

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் […]

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர்

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து […]