அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். ”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், […]
இலங்கை செய்திகள்
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
புசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக மின்சார விநியோக கம்பி அறுந்து விழ்ந்ததில் சிக்குண்டே களு எனப்படும் எஸ். அருணசாந்த என்ற 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணம் […]
இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பில் மாற்றுவழி
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பல வருடங்களாக யாழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கான நீர் விநியோக முயற்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு திட்டங்களினூடாக இந்த மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுமா என வினவினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. இரணைமடு நீர் தேக்கத்தின் கொள்வனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான […]
தொழில் திணைக்களத்திற்கு 191 புதிய நியமனங்கள்
தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். எண்பத்தைந்து இலட்சம் அளவிலான […]
வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழியில் தகவல் வழங்குவதில் நெருக்கடியாம்
வளிமண்டலவியல் திணைக்களத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறை காரணத்தினால் தங்களால் வானிலை முன்னறிவித்தல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னெச்சரிக்கைகளை தமிழ் மொழியில் விடுக்க முடியாதுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமலால் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் கடும் காற்று மற்றும் கனமழை பெய்துவருகின்ற நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து முன்னறிவித்தல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள போதும் இவ் […]
ஈரானில் நிலநடுக்கம்
கிழக்கு ஈரானில் இன்று அதிகாலை பாரிய மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானதுடன், அதன் பின்னர் 5 மற்றும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அப்பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
“நபி அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறை முக்கியமானதாகும்”
நபி அவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபி அவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது; இஸ்லாமிய சமய நம்பிக்கையின் படி இறைவனால் முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகக் தெரிவுசெய்யப்பட்டதுடன், […]
பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது, பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார […]
வீட்டிலிருந்த பெண் சுட்டுக்கொலை
கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவதினமான நேற்று இரவு உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், […]
“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்ற ஐவர் கைது
கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைதுசெய்துள்னர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகவும் அனைவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





