இலங்கை செய்திகள்

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இரு பிரதான கட்சிகள் இணைந்து நடத்திச் செல்லப்படும் சமகால அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. அதற்கமைய நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றஙம் ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவி அந்த கட்சிக்குள்ளேயும், சுதந்திர கட்சிக்கு கிடைத்த […]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி நாளை இலங்கை வருகின்றார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் நாளை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது, அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐ.நா அகதிகள் ஆணையம் அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை […]

ஜனாதிபதி

ஆபத்தில் சிக்கியுள்ள மைத்திரி! காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கள ஊடக தலைவர், அவரது ஊடகம், ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தாமரை மொட்டு குழுவினால் சமகால ஜனாதிபதி மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான […]

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! ஒன்று திரண்ட மக்களும் அரசியல் பிரமுகர்களும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்துள்ளது. இதை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், […]

மஹிந்தவின் கடும் எச்சரிக்கை! சம்பந்தனுக்கு ஆபத்து

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எதிர்க்கட்சி தலைமை பதவியை கோருகின்றோம். ரணில் தான் பிரதமராக இருப்பார் என நான் நினைக்கின்றேன். அது ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள கொடுக்கல் வாங்கலாகும். ஸ்ரீலங்கா […]

விடுதலை புலிகள் இல்லாததால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பேராபத்து! பழநெடுமாறன்

2009ஆம் அண்டு மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று சொன்னார்களே தவிற ஆயுதங்களை கீழே வைக்கின்றோம் என்று கூறவில்லை. என பழநெடுமாறன் தெரிவித்தார். மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் […]

maithiri ranil

ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்படுவார்கள்! மகிந்த அணி தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதியின் பலவீனம் காரணமாக சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக” […]

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் […]

முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட 50 முன்னாள் போராளிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கு 55 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியக் கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பலாலியில் உள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களைப் […]