ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்ப நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தோல்வியை தழுவிக்கொண்டன. […]
இலங்கை செய்திகள்
இலங்கை அரசியலில் நாளைய தினம் முக்கிய திருப்புமுனை!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதால், நாளைய தினம் இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியற்சிக்குமென அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருட்டு, கட்சித் தாவல்களும் இடம்பெறலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்றில் […]
இன்னும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்!! அதிர்ச்சி கொடுத்த ரணில்!!
19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என பிரதமர் கூறியதை கேட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்ததை […]
மாகாணசபைத் தேர்தல்கள் செப்டெம்பரில்
மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுக்கும் […]
போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டது?
போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அன்டன் கேஸின் போர் இரகசியங்கள் பற்றிய ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் […]
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் […]
அடுத்த பிரதமர் இவர்தானா? மைத்திரி தெரிவிப்பு!!
நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசங்க விலகிமாறும், கரு ஜயசூரியவை அப்பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதேபோல் , ஐ.தே.க. அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் மைத்திரியிடம் ரணிலை பதவியில் இருந்து […]
ரணிலின் அதிரடி அறிவிப்பு சூடு பிடித்துள்ள தெற்கு அரசியல்
நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது. எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து […]
முடிவுக்கு வரும் நல்லாட்சி! மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் […]
என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்…! மிரட்டும் மஹிந்த
கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் […]





