ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்படுவார்கள்! மகிந்த அணி தெரிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த சில தினங்களாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதியின் பலவீனம் காரணமாக சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.