இலங்கை செய்திகள்

விஜயகலா

விஜயகலாவிற்கு முக்கிய தடைகளை விதித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது, விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் […]

விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்

குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது ஆடை, அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார். ஒருபோதும் தனது […]

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!!

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய போராளியாக விளங்கிய விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் […]

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு , வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 […]

துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை

திருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன. கடற்கரை ஓரங்களில் பிலாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் என பரவலான பொருட்கள் கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடற்கரைப்பகுதியின் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதன்காரணமாக அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருவதனால் நதிகளினூடாக இந்தக் குப்பைகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் ஒரு பகுதி

அக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்றிரவு பெய்த மழையை அடுத்து பிங்கா ஓயா ஆற்று நீர் கண்டி – மாத்தளை பிரதான வீதி வழியே ஓட ஆரம்பித்ததால் சுமார் 4 அடிவரையான வெள்ளம் நிரம்பி காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரை அப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்தது. வெள்ளம் வழிந்து மகாவலி […]

மைத்திரி – மகிந்த இரகசிய சந்திப்பு ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து […]

தமிழர்களின் இடமான திருகோணமலையில் இருந்து தமிழர்களை வெளியேற்ற பாரியதிட்டம்

தனி நாடு (ஈழம்) கேட்டுப் போராடிய புலிகளை அழித்து விட்டோம். இப்போது இருப்பது தமிழர் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலை நகர் பகுதி. இந்த நகர் பகுதி எப்போதும் சிங்களத்திற்கு ஒரு உறுத்தலாகவே உள்ளது. அதை தவிடு பொடியாக்க வேண்டும் என்று சிங்களம் நீண்ட காலமாக முயன்று வருகின்றது . அதற்கு ஒரே வழி திருகோணமலை நகரை புனித பூமியாக்குவது. அதன் மூலமாக திருமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் புனித பூமி […]

யாழ்ப்பாணம் அழியப்போகின்றது; வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் […]

பெரும் சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.