இறுதி யுத்தத்தின்போது நானோ முன்னாள் ஜனாதிபதியோ நாட்டை விட்டு இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர் என ஜனாதிபதி சிறிசேன நியுயோக்கில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதில் அளிக்கையிலேயே சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் […]
இலங்கை செய்திகள்
குளிர்ந்து போன யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வறட்சியடைந்த பிரதேசங்கள் குளிர்ச்சியடைந்தன. விவசாயிகள் நெல் விதைப்புக்காக மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளதால், அடுத்த கட்டமாக வயல்களை உழுது சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளம் தேங்கும் அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை எனினும், விவசாயிகளுக்கு நன்மை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்துக்கு நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றோம். நாம் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் […]
இலங்கை இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு
இலங்கை இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோச னையை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முன்வைக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியிருந்தது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பத்தி ரிகை ஆசிரியர்களுடனான ஊடகச் சந்திப்பில் அரச தலைவர் மைத்திரிபால கருத்து வெளியிட்டிருந்தார். அரச தலைவர் இத்தகைய யோசனையை முன்வைப்பதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசுடன் இணங்கிச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச […]
திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்!
திருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் பயிற்சி நடைபெற்றுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தினர் தமது போர் உத்திகளை வெளிநாட்டுப் படையினருக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கடந்த 2010 ஆம்ஆண்ட முதல் நடத்திவரும் “நீர்க்காகம்கூட்டு போர்ப் பயிற்சிகளின்” இறுதி நாள் ஒத்திகைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதால், ஆயிரக் […]
தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம்
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன் கிழமை மன்னாரில் இடம் பெறவுள்ளது.மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், இன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெறவுள்ளது. இவ் உணர்வு பூர்வமான நிகழ்வில் அனைத்து தமிழினவுனர்வாளர்களையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு தார்மீக தமிழுரிமையுடன் […]
அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்!
வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த முறையும் முதலமைச்சர் பதவி தொடர்பாகச் சிந்திப்பது தெரிகின்றது. அவ்வாறில்லாவிட்டால் கூட்டமைப்பின் தலைமை பதவி விலகினால் முதலமைச்சர் வேட்பாளராகக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்குவேன் என அவர் கூறியிருக்கமாட்டார். கூட்டமைப்பையும் கூட்டமைப்பின் தலைமையையும் தாக்கிப்பேசி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் தற்போது இத்தகைய கருத்தை அவர் வெளியிட்டுள்ளமை கவனத்துக்குரியது. கூட்டமைப்பின் தலைமையைப் பதவி விலகிவிடுமாறு அந்த அமைப்பைச் சேர்ந்த எவருமே கோரிக்கை விடுத்ததில்லை. […]
யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை
பன்னாட்டுத் தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான சிறப்பு நடமாடும் சேவை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிராமத்திற்கான தகவல உரிமை’ எனும் தொனிப்பொருளில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், […]
கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவச் சிப்பாய்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ஷவைக் கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழ் ஊடகம் ஒன்றால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் […]
கடைசியில் பழி தமிழர்கள் மீதா?
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என்று கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. இடதுசாரிக் கட்சி ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜதந்திரியாகவும் இருந்தவருமான மங்கள முனசிங்க தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த அனுதாபத் […]





