இந்தியா செய்திகள்

Narendra Modi

ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி: பிரதமர் மோடி

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றிருந்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் இவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் அவர் ”ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமராக மோடி […]

13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணம் டெபாசிட் செய்த நிறுவனங்கள்

பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றினர். இதற்கிடையே 2000, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வரதொடங்கின. அந்த கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணங்களை வங்கிகள் மூலம் மாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில், 13 வங்கிகள் பணமதிப்பு […]

ரயில் பயணிகள் இனிமேல், மாதம் தோறும் 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இனி மாதம் தோறும் 12 முறை ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ஆன் லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம் – : அன்னா ஹசாரே அறிவுரை

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே கூறியதாவது: இளைஞர்கள் யாரும் என்னை பின்பற்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டாம். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சுலபமல்ல. இது கூர்மையான வாளின் மீது நடந்து செல்வதை விட கடினமானது. எனவே இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ வேண்டும். தூய்மையான எண்ணங்களும், செயல்களும் இருக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் திருமண […]

‘பதஞ்சலி, ‘பிராண்டு’ மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உயரும்’

புதுடில்லி : ”அடுத்த ஐந்து ஆண்டுகளில், பதஞ்சலி நிறுவனத்தின், ‘பிராண்டு’ மதிப்பு, 2 லட்சம் கோடி டாலராக உயரும்,” என, அதன் நிறுவனர், பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அவர், மேலும் கூறியதாவது:பதஞ்சலி, நுகர்பொருட்களுடன், புதிய துறைகளிலும் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்கள் அமைப்பது, தயாரிப்பு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உள்ளது. இரு ஆண்டுகளில், நிறுவனத்தின் தயாரிப்பு திறன், 1 லட்சம் […]

சமாஜ்வாடி கட்சியில் பிளவு கிடையாது, புதிய கட்சியை தொடங்கப்போவது இல்லை – முலாயம் சிங் யாதவ்

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியில் பெரும் மோதல் வெடித்தது, இது கட்சி உடைவிற்கும், தேர்தலில் தோல்விக்கும் வழிவகை செய்தது. சமாஜ்வாடி கட்சியின் உடைவு பாரதீய ஜனதாவிற்கு ஆதரவான நிலையை மேலும் வலுப்படுத்தியது. சமாஜ்வாடி கட்சியின் பிளவு தேர்தல் ஆணையம் வரையில் சென்று, கட்சி, சின்னம் அகிலேஷ் யாதவிற்கே சென்றது. இதனையடுத்து தனிப்பிரிவாக செயல்பட்ட முலாயம் சிங் யாதவ் பா.ஜனதா சார்பு […]

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் முகுல் ராய் அறிவிப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவர் முகுல் ராய், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீப காலமாக பா.ஜ.க. […]

குடும்ப அரசியலை நியாயப்படுத்தி ராகுல் காந்தி பேசியதை விமர்சித்தார் – பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா

டெல்லியில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட […]

அமெரிக்காவைக் தொடர்ந்து ரஷியா, சீனா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவர் பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கடசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் தோல்வி ஏற்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ராகுல் காந்திக்கு இந்தியாவில் சரியான இமேஜ் கிடைக்காமல் இருப்பது பெரும் குறையாக கருதப்படுகிறது. நேரு குடும்பத்துக்கு வாரிசு என்றாலும் அவர் முக்கிய விவாதங்களில் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளானது. […]

ஜம்மு காஷ்மீரில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால்,மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை