இந்தியா செய்திகள்

​தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி!

இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர […]

காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டதற்கு குவியும் கண்டனம்!

ராஜஸ்தான் மாநில அரசு மாநில பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு, அதன்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி […]

ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!

ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கும்பகோணத்தில் ஒஎன்ஜிசி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது, ஓஎன்ஜிசி மீது தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டல்தான் நாடு முழுமையாக வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்கள் தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி […]

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி

உ.பி.மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழந்தன. உ.பி.மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து […]

தாஜ்மஹால் கல்லறையா ? அல்லது சிவன் கோவிலா ?

தாஜ்மஹால் குறித்த உண்மையை அறியும் பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அய்யங்கார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். பிரபல வரலாற்றாசிரியர் பி.என்.ஓக் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் சக்ஸ்னா ஆகியோரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தாஜ்மஹால் உண்மையிலேயே ஷாஜகான் தன் மனைவிக்கு கட்டிய கல்லறைதானா? அல்லது ரஜபுத்திர மன்னர் முகலாய சாம்ராஜ்யத்திற்கு பரிசாக அளித்த சிவன் […]

முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் – டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் […]

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் […]

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியதாக கட்சியில் இருந்து ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்ட பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார். ராகுல் காந்தி […]

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை […]