முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘காஷ்மீரில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது, தங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. அவர்களுடன் நான் உரையாடியபோது, பெரும்பாலானோர் சுயாட்சியை விரும்புவதை உணர்ந்தேன். நானும் கூட அதையே விரும்புகிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் […]
இந்தியா செய்திகள்
காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி
தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை […]
மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் குறித்து விரைந்து வந்த 17 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் ரெயில் சேவை பாதிப்பு இல்லை என்ற கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சூடு
அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூட, ராகுல் காந்தி ‘டுவிட்’களுக்கு ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மறுடுவிட் வருவதை கிண்டல் செய்து, ‘‘ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?’’ என கூறி இருந்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி., செய்தி […]
வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘‘ சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என கேட்டுக் […]
வரிவிகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி முறையை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகித்து வருகிறது. இந்த வரி முறையில் இருந்து உணவு தானியங்கள், பால், பழம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பொருட்களுக்கு, சேவைகளுக்கு 5, 12, 18, […]
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– உங்களது ஊழலுக்கு எதிரான போர் பற்றிய உறுதிமொழிக்கும், குறிப்பாக உயர்மட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அதேசமயம் இந்த வழக்குகள் விசாரணையில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக ஏர்செல்–மேக்சிஸ், சாரதா சீட்டு கம்பெனி, ராபர்ட் வதேரா […]
இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து […]
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். […]
இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!
இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன. இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு […]





