பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, தன்னிடமுள்ள ஆதாரங்களையும் சமர்ப்பிக்க விரும்புவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புண்டு என, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனையடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், மேற்குறித்தவாறு […]
Author: தமிழ்மாறன்
செஞ்சோலை தளிர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பதினொன்று!
யுத்தத்தால் தமது உறவுகளை பறிகொடுத்து, பாசத்திற்காய் ஏங்கித் தவித்து, எதிர்காலம் பற்றி சிந்திக்கவே தெரியாத பருவத்தில் வாழ்ந்த செஞ்சோலை சிறுமிகளை கொடூரமாக கொன்றொழித்து இன்றுடன் ஆண்டுகள் பதினொன்று ஆகிவிட்டது. இலங்கை படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களில், வரலாற்றில் மிகவும் கறைபடிந்த, அனைவர் மனதையும் உருக்கும் கோரச் சம்பவ பட்டியலில் இதுவும் ஒன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு இதே […]
விஜயதாசவிற்கு வலை வீசும் மஹிந்த அணி!
நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டதாலேயெ நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச சதித் திட்டத்தின் […]
நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் கைது
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 18 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றையும் மீட்ட கடற்படையினர், மீனவர்களை யாழ். நீரியல் வள […]
நம்பிக்கையை சிதறடிக்கும் சி.வி: சத்தியலிங்கம் குற்றச்சாட்டு
எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மாகாணத்தில் புதியவர்கள் அரசியலுக்கு வருவதும் ஊரில் இருந்து ஒருவர் அரசியலுக்கு […]
தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். […]
பீரங்கியை சுமந்தவர்களுக்கு கத்தியை சுமக்கவேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் போராளிகள்
பீரங்கிகளையும் செல்களையும் தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு, கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லையென ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் எஸ்.துளசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு என்ற பெயரில் முன்னாள் போராளிகளே செயற்படுகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், […]
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடம் இல்லை: சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டம்
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் […]
வடகொரியாவின் ஏவுகணையை இடைமறிக்க முடியும் : ஜப்பான் அறிவிப்பு
அமெரிக்க தீவை நோக்கி செலுத்தும் வடகொரியாவின் ஏவுகணைகளை சட்டப்படி இடைமறிக்க முடியும் என்று ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி ஒனோடெரா கூறினார். அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது 4 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல், உலக அரங்கை அதிர வைத்துள்ளது. அடுத்த சில தினங்களில் இதற்கான திட்டத்தை வடகொரியா இறுதி செய்யப்போவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ‘வாசோங்-12’ ஏவுகணைகள், ஜப்பானின் மீது […]
அமெரிக்கா மீது தாக்குதல்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் குயாம் தீவு மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நியுஜெர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் என்ற இடத்தில் தனது விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வருகிறார். இந்த நிலையில் வடகொரியா மிரட்டல் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வடகொரியாவின் மிரட்டலை எப்படி கையால்வது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. […]





